Showing posts with label அரசியல் நையாண்டி. Show all posts
Showing posts with label அரசியல் நையாண்டி. Show all posts

Thursday, March 26, 2009

533. தமிழில் அர்ச்சனை :-)

இன்று மெயிலில் ஒரு மேட்டர் வந்தது, "தமிழில் அர்ச்சனை" என்ற தலைப்பில். அனுப்பியவரின் ஐடி சற்று வித்தியாசமாக இருந்தது, "EXPLAIN Islam" !! ஆனால் மேட்டர் இஸ்லாம் பற்றி கிடையாது. "தமிழில் அர்ச்சனை" என்ற பெயரில் போலி "பகுத்தறிவு" வியாதிகளுக்கு அர்ச்சனை :-) வாசிக்க சுவாரசியமாக, சிந்தனையை தூண்டும் விதத்தில் (!) இருந்தது. ஆகவே, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :-)

எ.அ.பாலா

***********************************************

கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக் கொள்ளும் போலிப் பகுத்தறிவுவாதிகள் இன்னொரு புறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.

கடவுள் இல்லை என்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை எந்த மொழியில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும்.

நேர்மையான சமரசம் செய்து கொள்ளாத பகுத்தறிவு இப்படித்தான் தீர்ப்பளிக்கும்.

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறுவதும் அதை வர வேற்பதும் எந்த வகையில் பகுத்தறிவு சார்ந்ததாகும்?

இதற்கு போலிப் பகுத்தறிவுவாதிகள் கூறுகின்ற காரணங்கள் யாவும் பகுத்தறி வுக்கு வெளியே நின்று கொண்டு கூறுகின்ற காரணங்களாகவே உள்ளன.

பகுத்தறிவுக்கு இது ஒவ்வாத செயல் தான்! பார்ப்பனரைப் பழி தீர்க்க இது அவசியம் என்று கூறுவார்களானால் இந்த வகையில் இவர்களும் மதவாதிகளைப் போல்தானே நடக்கின்றனர்?

இன உணர்வு, பழிவாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது அனைத்து மூட நம்பிக்கைகளையும் மிஞ்சிய மூட நம்பிக்கையல்லவா?

இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது பகுத்தறிவுக்கு அல்லது அறிவியலுக்கு உட்பட்டதுதான் என்பதை நிரூபிக்க போலிப் பகுத்தறிவுவாதிகள் தயாரா என்று அறைகூவல் விடுக்கிறோம்.

கடவுளின் பெயரால் பண விரயம் இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்வதுடன் கடவுளுக்காக அபிஷேகம் என்ற பெயரில் பொருட்களைப் பாழாக்கலாமா என்று மேடை போட்டு போலிப் பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சாரத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்ததால் இதை முஸ்லிம்களாகிய நாமும் வரவேற்போம். ஆனால் எதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்று இவர்கள் சித்தரித்தார்களோ அதுபோன்ற காரியங்களை இவர்களே செய்தும் வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் நடத்தும் விடு தலை 05 08 2008 நாளேட்டில் படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

'புதுச்சேரியில் பஞ்ச முக ஆஞ்சனேயருக்கு 1001 லிட்டர் பாலை அபிஷேகம் செய்து பாலை வீணாக்கியுள்ளனர். எத்தனையோ குழந்தைகள் சத்துணவுக் குறைவாலும் பசியாலும் அவதியுறும் போது இப்படி பாலை வீணாக்கலாமா' என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். நல்ல கேள்விகள்தான். ஆனால் அதற்கு மறுநாள் வெளியான விடுதலை நாளேட்டில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

சைதை பகுதியில் பெரியார் சிலை நிறுவ தி.க.வினர் முடிவு செய்துள்ளார்களாம். அதற்கு முதல் கட்டமாக, எம்.பி. பாலு என்பவர் பத்தாயிரம் ரூபாய் அவரது குடும்பத்தினர் பதினைந்தாயிரம் ரூபாய், மதியழகன் பத்தாயிரம், அவரது குடும் பத்தார் ஐயாயிரம், தென்றல் பத்தாயிரம், அவரது குடும்பத்தினர் ஐயாயிரம், பத்ம நாபன் ஐயாயிரம், இரவி ஆயிரம் பிரபாகரன் ஆயிரம் என நிதி வழங்கினார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதெல்லாம் ஆரம்ப கட்டமாகத் திரட்டப்பட்ட நிதியாம். புதுச்சேரியில் 1001 லிட்டர் பால் அபிஷேகம் செய்தார்கள் என்றால் 500 லிட்டர் பாலுடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்துதான் அபிஷேகம் செய்திருப்பார்கள். கறந்த பாலை அப்படியே அபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள்.

ஒரு லிட்டர் பால் பதினெட்டு ரூபாய் என்ற கணக்கின்படி 500 லிட்டர் பால் ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். தண்ணீர் இல்லாத பால் என்றால்கூட 1000 லிட்ட ருக்கு பதினெட்டாயிரம் ரூபாய்தான் ஆகும்.

இந்த பதினெட்டாயிரம் ரூபாயை நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் ஐந்தும் பத்துமாகத் திரட்டியிருப்பார்கள். ஒவ்வொரு பக்தனும் நூறு இருநூறு ரூபாய் பணத்தை வீணாக்கியிருப்பான்.

ஆனால் மூட நம்பிக்கையின் முதல் அடையாளமான ஒரு கற்சிலையை நிறுவ ஒரு குடும்பமே 25 ஆயிரம் (பதினைந் தாயிரம், பத்தாயிரம்) என்று கொடுக்கும் அளவுக்கு பயங்கர சிந்தனையாளர்களாக இருக்கிறார்களே? இந்தப் பகுத்தறிவைக் கண்டு புல்லரிக்கிறது போங்கள்!

பாலுக்காக செலவிட்ட பணத்தை மட்டும்தான் ஏழைக் குழந்தைகளின் உணவுக்கு செலவிட முடியுமா? கல்லுக்காக செலவிட்ட பல்லாயிரம் ரூபாய்களைக் கொண்டு வறுமையை விரட்டியிருக்கலாமே! ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கலாமே!

அதுகூட மதவாதிகளுக்குத்தான் சாத்தியமாகும். அக்மார்க் பகுத்தறிவுவாதிகள் ஏழைக் குழந்தைகளுக்கு தான தர்மம் செய்யக் கூடாது என்றுதான் இவர்களின் ஆசான் பெரியார் இவர்களுக்குப் போதித்துள்ளார்.

ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும் பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன் - குடியரசு 21 4 1945 இதழில் பெரியார்.

கல்லுக்கு அபிஷேகம் செய்தால் அதுவும் மூட நம்பிக்கையாகி விடுகிறது. அந்தப் பாலை ஏழைகளுக்குத் தர்மம் செய்தால் அதுவும் உங்கள் தந்தையின் பார்வையில் அயோக்கியத்தனமாக ஆகி விடுகின்றது. இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?

இவர்களால் விமர்சிக்கப்படும் மதவாதிகளாவது கற்சிலைகளுக்கு பாலை அபி ஷேகம் செய்வதற்கு ஒருபுறம் பணத்தை வீணாக்கினாலும் ஏழைக் குழந்தைகளுக்காகவும் தங்கள் நிதியாதாரத்தை செல விட்டு வருகின்றனர்.

ஆனால் அக்மார்க் பகுத்தறிவாளர்கள் சிலைக்கு மட்டும்தான் செலவு செய்வார்கள். ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்து அயோக்கியர்களாக மாட்டார்கள்.

மக்களுக்கு உதவாத இந்தப் பகுத்தறிவை விட மக்களுக்கு கருணை காட்டும் அந்த மதவாதிகள் ஆயிரம் மடங்கு சிறந்து விளங்குகிறார்கள்.

பெரியார் பிறந்த (நாளாக இவர்கள் கூறும்) நாட்களின்போதும் இறந்த நாளின் போதும் அவரது சிலைக்காக ராட்சத மலர் மாலைகள் நூற்றுக்கணக்கில் போடப்படுகிறதே! இதற்கு ஆகும் செலவு பாலாபி ஷேகத்திற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ளதே!

பொருளாதாரத்தை நாசமாக்கலாமா என்று நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளையும் அதைவிட வலிமையாக இந்து மதவாதிகள் உங்களை நோக்கி கேட்க முடியுமே?

மற்றவர்களை நோக்கி நீங்கள் எழுப்பும் கேள்விகள் மட்டும் அறிவுப்பூர்வமாக இருந்தால் போதுமா? அவர்கள் உங்களை நோக்கி அதே கேள்விகளைக் கேட்கும் நிலைமையில் நீங்கள் இருக்கக் கூடாது என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை?

போலிப் பகுத்தறிவுவாதிகளான உங்களைப் பொருத்தவரை மற்ற எவரையும் விமர்சனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து, முதலில் உங்கள் நடவடிக்கைகளைச் சரி செய்யும் வழியைப் பாருங்கள்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
***********************************************

Monday, December 08, 2008

480. இந்தியா மீது பாக். அணுகுண்டு வீசுமா?

இந்தியா மீது அணு குண்டு வீசப்பட்டால் பின்வரும் சம்பவங்கள் தொடரும்.

1. மன்மோகன் டி வி யில் தோன்றி தான் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்தியாவின் பக்கத்து நாடுகளின் ஒன்றே இந்த அணுகுண்டை வீசியிருப்பதாக நான் 'தீவிரமாக' சந்தேகப்படுவதாகவும் இதற்கு இந்திய அரசு தக்கவிதத்தில், கலந்து ஆலோசித்துப் பதில் சொல்லும் என்றும் கூறுவார்

2. காண்டலிசா ரைஸுக்கு பதிலாக ஹிலரி இந்தியா பிரயாணப்பட்டு "இந்தியா பொறுமை காக்க வேண்டும் ஒரே ஒரு நகரத்தில் தானே அணுகுண்டு போட்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன இந்தியா முழுக்கவா போட்டார்கள் நான் அவர்களிடம் சொல்லி இனிமேல் ஒழுங்காக இருக்கச் சொல்கிறேன் நீங்கள் அமைதி காக்க வேண்டும் இல்லாவிட்டால் தாலிபான் எங்களை ஆப்கானிஸ்தானுக்குள் மாறி மாறி அடிப்பார்கள், 'நாம்' ஒன்று சேர்ந்து war against terror ல் வெல்வோம்!" என்று சொல்லி விட்டுப் போவார். அவரைத் தொடர்ந்து பிற குஞ்சுக் குழுவான்கள் வந்து அதே வார்த்தைகளை பல விதமாக பிரயோகித்து விட்டுப் போவார்கள்

3. பாக்கிஸ்தான் பிரதமர் 'இந்த அணுகுண்டு பாக்கிஸ்தானில் இருந்து வீசப் பட்டிருக்கலாம். இருந்தாலும் அதற்கும் பாக்கிஸ்தான் அரசுக்கும் சம்பந்தமில்லை(!) அப்படி வீசினோம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அப்படி ஆதாரம் கொடுத்தால் நாங்கள் கண்டு பிடித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால் யார் மீது எடுப்பது என்பதில் சின்னக் குழப்பம் உள்ளது. மேலும், ஐ.எஸ்.ஐ ஒரு non-state actor!! அணுகுண்டு வீசியதை நாங்கள் கண்டிக்கிறோம் அதே நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியும் அடைகிறோம்' என்பார்

4. உலகம் முழுக்க மீடியாக்கள் 'பாக்கிஸ்தான் தான் அணுகுண்டு போட்டதற்கு என்ன ஆதாரம் என்பதை இன்னும் இந்தியா அளிக்கவில்லை' என்பார்கள்

5. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் 'அணுகுண்டு போட்டது பாக்கிஸ்தான் தான் என்று தடாலடியாகச் சொல்லக் கூடாது. 'புலன் விசாரணை' செய்து கண்டு பிடிக்க வேண்டும், அதற்கு சீனாவிடம் ஒத்துழைப்புக் கேளுங்கள், அமெரிக்காவின் அடிவருடியதால் தான் இந்த நிலைமை வந்தது' என்று சொல்வார்கள்.

6. இந்து பத்திரிகை, அந்தோணி மார்க்ஸ் ஆகியோர் 'இதை 'கடுமையாக' கண்டிக்கும் அதே வேளையில் ஏன் போட்டார்கள் என்பதற்கான நியாயமான காரணத்தை நாம் ஆராயந்து அவர்களுக்குள்ள மனக்குறையைக் களைய வேண்டும்' என்பார்கள். இ.பா 'காஷ்மீரைக் கொடுத்திருந்தால் இப்படி அணுகுண்டு போட்டிருப்பார்களா? என் வீட்டுக்கு முன்னாடி கூடத்தான் தீபாவளி அன்று சிறுவர்கள் அணுகுண்டு போட்டார்கள் அதற்கெல்லாம் நான் வருத்தமா பட்டேன். அணுகுண்டு போட்டவர்களுக்கு ஆண்மை இருக்கிறதா இல்லை அந்தக் குறையைப் போக்கப் போட்டார்களா என்பதை நாம் பாரபட்சம் இன்றி ஆய்வு செய்ய வேண்டும்' என்பார்!

7. நமது போலி செக்யூலரிஸ்ட்கள், அச்ச உணர்வின் காரணமாக அவர்கள் அணுகுண்டு போட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்களது ஏழ்மையே காரணம். அச்ச உணர்வையும் தரித்தரத்தையும் நீக்க வழிவகை செய்தல் வேண்டும் என்பார்கள். போ.செக்யூலரிஸ்ட்களை, தேசியத்தில் மிக்க நம்பிக்கை உள்ளவர்கள் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். நடுநிலைவாதிகள் தேசியவாதிகளுக்கு 'இவ்வளவு சினம் ஆகாது' என்று அறிவுறுத்துவார்கள் !

8. பிஜேபி POTA இல்லாததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது, அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஆவேசப்படும்

9. 'குடும்ப ஆரோக்கியத்தை ஈஸியா எடுத்துக்கலாமா? அதனால் தான் நான் அதில் முழுகவனம் செலுத்துகிறேன்' என்றவாறு கருணாநிதி தன் பணியில் மூழ்கியிருப்பார். ஜெயலலிதா 'கருணாநிதியின் மைனாரிட்டி அரசு தான் இந்த நிலைமைக்கு காரணம். அதனால், அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியை விட்டு விலகுவது அதை விட உசிதம்!' என்று தனது 788-வது கோப அறிக்கையை விடுவார்!

10. நமது இந்திய நியூஸ் மீடியா சேனல்கள், குண்டு வெடித்ததையும், மக்கள் கும்பல் கும்பலாக செத்துப் போனதையும் மிக அருகில் இருந்து படம் பிடித்து, அக்காட்சிகளை விடாமல் 24/7 ஒளிபரப்புவார்கள்! "Breaking News-ல் நாங்கள் தான் நம்பர் ஒன். இவ்வளவு அருகில் சென்று படம் பிடித்து உங்களுக்கு exclusive காட்சிகளையும் செய்திகளையும் தருவது நாங்கள் மட்டுமே! கடந்த நான்கு நாட்களில் எங்கள் கவரேஜை 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறீர்கள், உங்களுக்கு நன்றி" என்று எப்போதும் போல போட்டி போட்டுக் கொண்டு விளம்பரத்துக்கு அலைவார்கள்!

எ.அ.பாலா

பி.கு: மக்களே, மேற்கூறியது போல உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால், பின்னூட்டத்தில் சொல்லவும் !

Monday, April 07, 2008

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.??

எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?

??அதெப்படிச் சொல்வீர்கள்? தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.??

அதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா?

??என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கன்னட மொழிப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.??

கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?

??அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.??

கேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே?

??தமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.??

எதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்?

??ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது? அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்றியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.??

ஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே?

??அது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, ?காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா? அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது!?? என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக? கொண்டார் வாட்டாள்

நன்றி :குமுதம் ரிப்போட்டர்

Saturday, December 15, 2007

399. மருத்துவர் ஐயா vs அமைச்சர் - பாகம் II

எதிர்பார்த்தது போலவே, திமுக பாமகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என்று டாக்டர் ஐயா கூறி விட்டார்! 'நாங்கள் திமுகவின் தோழமைக்கட்சி அல்ல, நட்புடன் கருத்து கூறும் எதிர்க்கட்சி மட்டுமே' என்று மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி (திமுக அதில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அமைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அது போலவே, நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், வந்திருந்தாலும் சென்றிருக்க மாட்டோம் என்று மேலும் கூறினார்.

அத்துடன், பத்திரிகையாளர் குழுவை திண்டிவனம் அருகில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்று, ஆவணங்களையும் சாட்சிகளையும் காட்டி, ஆற்காட்டாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதையும் சுட்டிக் காட்டினார். பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வரும் நிலம், விளைநிலமோ, பொறம்போக்கு நிலமோ அல்ல என்று உறுதிபடக் கூறினார்.

2011 சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அஇஅதிமுக இல்லாத ஒரு கூட்டணிக்கு பாமக தலைமை வகிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் !!! OBC இடஒதுக்கீடு மற்றும் AIIMS பிரச்சினைகளில் திமுக தங்களுக்கு தேவையான ஆதரவு அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

கடலூரில் மின்நிலையத் திட்டத்திற்கு, ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதில் கூறவில்லை என்பதையும், அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு அத்திட்டத்தில் பங்கு உள்ளது என்பதையும் அமைச்சர் இதுவரை மறுக்கவில்லை என்பதையும் ராமதாஸ் சுட்டிக் காட்டினார்.

இது இப்படி இருக்க, மருத்துவர் பல சமயங்களில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக ஆற்காட்டார் குற்றம் சாட்டியுள்ளார். வன்னியர் பல்கலைக்கழகம் குறித்து தான் வைத்த குற்றச்சாட்டின் பேரில் தன் மேல் வழக்கு தொடருமாறு அமைச்சர் மருத்துவர் ஐயாவுக்கு சவால் விடுத்துள்ளார். (முதலில், டாக்டர் ஐயாவின் சவால், இப்ப அமைச்சரின் சவால்! :))

சென்னைக்கு வெளியே, நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவில் பொறம்போக்கு நிலங்களை பாமகவினர் ஆக்ரமிப்பு செய்திருப்பதாகவும், அதனாலேயே திமுகவின் சாட்டிலைட் நகர் திட்டத்தை பாமக எதிர்த்து முடக்கியதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். (இது நடந்து ஓராண்டு கழித்து, அமைச்சர் குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக உள்ளது !!!)

மேலும், ஒன்றரை கோடி வன்னிய மக்களுக்கு தான் ஒருவரே பிரதிநிதி போல ராமதாஸ் பேசுவது விந்தையாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடரும் .....

நன்றி: டெக்கான் குரோனிகள், இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, December 14, 2007

ராமதாஸ் VS ஆற்காட்டார் = ஐயோ ஐயோ ஐயோ!

இப்ப நடந்து கொண்டிருக்கும் ராமதாஸ்-ஆற்காட்டார் மோதல், தீப்பொறி நிலையிலிருந்து காட்டுத்தீ அளவுக்கு போய் விட்டது !!! எப்போதும் போல இதை தொடங்கி வைத்தவர் மருத்துவர் ஐயா தான். மின்சாரப் பற்றாக்குறையை முன் வைத்து தமிழக அரசையும், அமைச்சரையும் ராமதாஸ் ஒரு பிடி பிடித்ததோடு நில்லாமல், கடலூர் அருகில் உள்ள தியாகவல்லி மற்றும் குடிகாடு ஆகிய கிராமங்களில், மின் உற்பத்திக்காக தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள நிலம், விவசாய நிலம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதுவரை மருத்துவரை சகித்துக் கொண்ட திமுக, திருப்பித் தாக்க ஆற்காட்டாருக்கு அனுமதி கொடுத்திருக்கும் என்பது என் யூகம் :) அரசின் அனைத்து நலத் திட்டங்களுக்கும், ஏதாவது காரணம் காட்டி, ராமதாஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும், அவரின் போக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், திமுக மீது மக்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதே மருத்துவரின் எண்ணம் என்றும், ஆனால் அவரது ஆசை நிறைவேறாது என்றும் மருத்துவர் ஐயாவை தைரியமாக ஒரு வாங்கு வாங்கி விட்டார் ! அவருக்கு பாராட்டுக்கள் ;-)

மேலும், ராமதாஸ் சொல்வது போல் அரசு கையகப்படுத்தியுள்ள நிலம், விளை நிலமே அல்ல என்றும், டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு காட்டுமிராண்டி காலத்தை போல் மாற வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்!

அதோடு நில்லாமல், கொனேரிக்குப்பம் அருகில், வன்னியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பா.ம.க வாங்கியிருக்கும் நிலங்களிலும், விளை நிலம் இருப்பதையும், பொறம்போக்கு நிலம் ஆக்ரமிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். திமுக தரப்பிலிருந்து இப்படிப்பட்ட பலத்த எதிர்ப்பை எதிர்பார்க்காத மருத்துவர், பொங்கியெழுந்து விட்டார். ஆற்காட்டார் (தான் கூறியதை) ஆதாரங்களோடு நிரூபித்தால், ராமதாஸ் தான் அரசியலை விட்டே நிரந்தரமாக விலகுவதாக ஒரு சவால் விட்டார் ! என்ன, தமிழ் சினிமா மாதிரி இருக்கா ? ;-)

தொடர்ந்து ஆற்காட்டாரும், சில ஆவணங்களில் உள்ள தகவல்களை முன் வைத்து, தான் எடுத்துரைத்த குற்றச்சாட்டை ஆதாரத்தோடு நிரூபித்து விட்டதாகவும், தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருப்பதாகவும், சவால் குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை டாக்டர் ராமதாசுக்கே விட்டு விடுவதாகவும் சற்று நீளமான பன்ச் டயலாக் ஒன்று விட்டார் !

மருத்துவர் சும்மா இருப்பாரா ? ஏழை எளிய நலிந்த வன்னிய மாணவர்களுக்காக, வன்னியர் கல்வி அறக்கட்டளையினால் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தை, வன்னிய சமுதாயம் ஒரு கோயிலாகக் கருதுவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதை வைத்து தன்னை 'வளர்ச்சிக்கு எதிரி' என்று கருதினால் அது குறித்து தனக்குக் கவலையில்லை என்று (எதிர்பார்த்தது போலவே) மருத்துவர் பதில் முழக்கமிட்டார் !!! அதோடு, அமைச்சர் வீராசாமியின் வீண்பழி ஒன்றரை கோடி வன்னிய மக்களின் மனதை மேலும் புண்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை (ஒரு வழியா மெயின் மேட்டருக்கு வந்தாச்சில்லையா ;-))) என்று மனம் கலங்கினார் !

"தமிழகம் முழுவதும் ஏரி புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கூறு போட்டு விற்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து விற்கப்படுகின்றன. இப்படி ஏரி புறம்போக்கு நிலங்களை கூறு போட்டு விற்ற குபேரர்கள் யார் என்பது ஊருக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறிய ராமதாஸ், அவர்களை தக்க சமயத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் விடுத்த இறுதி எச்சரிக்கையோடு, இந்த மோதல், சாரி, யுத்தம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது !

டாக்டர் ஐயா இன்னும் நிறையப் பேசினார், எனக்கு தட்டச்ச பொறுமையில்லை :)

"நாட்டு மக்களை ஏமாற்றுகிறவர்கள் யார்? உத்தமர்கள் போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? என்பதை அப்போது மக்கள் அறியத்தான் போகிறார்கள்" என்று முத்தாய்ப்பாக மருத்துவர் கூறியது மிகச் சரியான கூற்றே !

எல்லாருக்கும் (மக்களுக்கு) எல்லாரைப் பற்றியும் எல்லாம் தெரியும் ! அதனால், ராமதாஸ் மற்றும் ஆற்காட்டார் அறிக்கைகளை/பேச்சை வைத்தெல்லாம் மக்கள் எந்த முடிவுக்கும் வரப்போவதில்லை என்பதும், இந்த மோதலில் இரு தரப்பினருமே அம்பலப்பட்டு நிற்கிறார்கள் என்பதும் நிதர்சனம் ;-)

எ.அ.பாலா

Sunday, September 23, 2007

360. விரும்பத் தக்கவரா இராமர் ?

ராமர் இஞ்சினியரிங் படித்திராவிட்டாலும், அவர் ராமர் சேது கட்டியிருக்காவிட்டாலும், அவர் சோமபானம் அருந்தியிருந்தாலும் (அவர் அருந்தவில்லை என்பது வேறு விஷயம்! சுக்ரீவன் அடிக்கடி சோமபானம் அருந்தி வந்ததை அவர் கடிந்திருக்கிறார் என்று தான் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது!) அவரை விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன அல்லவா ?

1. இராமர் ஏகபத்தினி விரதர்!

2. தந்தை தந்த வரத்திற்காக, விருப்பத்துடன் மணிமுடியைத் துறந்து வனவாழ்வை மேற்கொண்டவர், அதாவது 'நாற்காலி' ஆசை துளியும் அற்றவர்!

3. சாமானியர்கள் (குகன், சபரி, அகலிகை, சுக்ரீவன் ...) பேரில் உண்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாமனிதர்.

4. தனக்காக உயிரையும் தரவல்ல நட்பையும், சுற்றத்தையும் (ஜடாயு, அனுமன், இலக்குவன், பரதன் ...) தனது மேன்மையால் கிடைக்கப் பெற்றவர்.

5. (கொழுக்கட்டையோ கூழோ என்ற பேதம் பார்க்காமல்) குகன் தந்த மீனையும், தேனையும் ஒன்றாக பாவித்து ஏற்றுக் கொண்டவர்!

6. தன் மனைவியை அபகரித்த எதிரி போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கையில், "இன்று போய் நாளை வா" என்று பெருந்தன்மையோடு கூறிய நல்ல மனிதர்.

7. லவன், குசன் என்ற உலகம் வியந்த மைந்தர்களின் தந்தை!

8. வெற்றுப்பேச்சு பேசி பொழுதைக் கழிக்காமல், தன் செயல்களால் (ராம ராஜ்யம் அமைத்து!) தன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்.

9. தன் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் ஒன்று போல் பாவித்தவர்!

10. பொய்யுரைக்காதவர், சந்தர்ப்பவாதம் அறியாதவர். நேர்மையாளராக வாழ்ந்து இன்றும் மக்களின் மனதில் அவதார நாயகனாக வாழ்பவர்!

11. தன்னை வெறுத்த சிற்றன்னை மீதும் அன்பு செலுத்தி, அரவணைத்துக் கொண்டவர்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தான்! புரிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும், புரியாதவர்களுக்கு (புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு!) என்ன சொல்லியும் புரியப் போவதில்லை! அதனால், யாருக்கும் எந்த நட்டமும் இல்லை :)

*** 360 ***

Wednesday, June 06, 2007

349. "மோசடி தாத்தாவும் மோடி வித்தை பேரனும்' - ஜெ. சொன்ன கதை

ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறிய கதை:

இப்போது நடந்து வரும் வாரிசு சண்டையை பார்க்கும்போது எனக்கு கதை வடிவில்
உள்ள நாடகம் நனைவுக்கு வருகிறது. ஒரு பெரியவரை தேடி பேரன் வயதில் ஒருவர்
வந்தார். "தாத்தா என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டார். அவரை
உற்றுப்பார்த்த பெரியவர், "இல்லையே' என்றார். "பத்து வருடத்திற்கு முன்பு
நான் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டபோது நீங்கள் வேறொருவரிடம் இருந்து
பத்தாயிரம் ரூபாய் வாங்கி தந்தீர்கள். அதன் மூலம் என் வாழ்க்கைக்கு
விளக்கேற்றி வைத்தீர்கள்' என்றார் பேரன்."அப்படியா பேராண்டி. அது
வேறொருவருடைய பணம் தானே? அதற்காக இப்போது வந்து நன்றி சொல்ல வேண்டிய
அவசியம் இல்லையே' என்றார் தாத்தா. அதற்கு பேரனோ, "நான் அதற்காக வரவில்லை.
அதே போல் இன்னொரு தடவை என் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்க முடியுமா
என்று கேட்கத்தான் வந்தேன்' என்றார் பேரன். இவ்வாறு ஜெயலலிதா சொன்னார்.

<b>நன்றி: தினமலர்</b>

Friday, June 01, 2007

347. தினகரன் ஆபிஸ் - புயலுக்குப் பின்னே அமைதி!

Photo Sharing and Video Hosting at Photobucket

*** 347 ***

Tuesday, May 15, 2007

346. இட்லிவடைக்கு நன்றி

இட்லிவடைக்கு நன்றி

"நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்" என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது."

நல்ல மகன் ! நல்ல அப்பா ! வாழ்க தமிழ்த் திருநாடு !

*** 346 ***

Tuesday, May 08, 2007

344. அப்டி போடு அருவாள !

டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சர் * சொல்கிறார் ராமதாஸ்

அமைச்சர்களில் டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சராக செயல்படுகிறார் என்று பா.ம.க. தலைவர் ராம்தாஸ் கூறினார். சென்னையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

சிமென்ட் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பருப்பு, எண்ணெயை பாக்கெட் செய்து ரேஷன் கடைகளில் வினியோகிப்பது போல் சிமென்டையும் இறக்குமதி செய்து ரேஷன் கடை அல்லது டாஸ்மாக்கில் விற்பனை செய்ய வேண்டும்(!). விரைவில் சிமென்ட் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

பீடி பண்டல்களில் மண்டை ஓடு வருகிறது. இதை அகற்ற மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது பீடி முதலாளிகளின் குரலாகவே எதிரொலிக்கிறது. ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி இதுவரை கடிதம் எழுதாதது ஏன்?

ரிலையன்ஸ் நிறுவனங்களுடன் சில்லரை வர்த்தகர்கள் போட்டி போட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி கூறுவது, அனில் அம்பானியுடன் சாதாராண ஆறுமுகம் போட்டி போட முடியுமா என்று கேட்பது போல் உள்ளது.
 
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதாக கூறப்பட்டிருப்பது சூப்பர் கணிப்பு. கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனத்தின் கணிப்பு பல முறை தவறாகியுள்ளது.  இவர்களாகவே ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அமைச்சர்களில் டி.ஆர்.பாலு நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பணிகளை சிறப்பாக செய்துள்ளார். முதலிடம் அவருக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும்.

(Side comment: மாறன் குடும்பத்து நாளிதழான தினகரனில் வெளியாகியுள்ள அந்த சர்வே, டாக்டர் ராமதாஸை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.  தமிழகக் கட்சிகளிலிருந்து தில்லி சென்றிருக்கும் அமைச்சர்களில், தயாநிதி மாறனே அதிக நிர்வாகத் திறமை மிக்கவராக அந்த சர்வே கூறுகிறது.  அவர் 64% ஓட்டுகளை அந்த சர்வேயில் பெற்றுள்ளார். அவரை அடுத்து, அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் ப.சிதம்பரம் மற்றும் டி.ஆர்.பாலு.

டாக்டர் அன்புமணி 1% ஒட்டுகளே பெற்றிருப்பதாக அந்த சர்வே கூறியிருப்பதே, மருத்துவரின் கோபத்துக்குக் காரணம். இதன் மூலம், முதலமைச்சர் மலிவான அரசியல் செய்வதாகவும் டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார்.)

அன்புமணியை உலக அளவில் புகழ்கின்றனர். தயாநிதி மாறனுக்கு நூற்றுக்கு நூறு மார்க் கூட போட்டுக் கொள்ளுங்கள். அதற்காக அன்புமணியை இழிவுப் படுத்தாதீர்கள். தமிழக அரசியலில் இதுவரை இந்த நிலை வந்ததில்லை. இதன் மூலம் புதிய நாகரிகத்தை தமிழகத்தில் புகுத்துகின்றனர். தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணி கட்சியில் தொடர்ந்து நீடிப்போம். ஐந்து ஆண்டுகளும் ஆதரவு தருவோம். ஆனால், ஜால்ரா மட்டும் போட மாட்டோம்.  இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

(Final comment: ஒரே குழப்பமா இல்லை ;-))

நன்றி: தினமலர்

*** 344 ***

Tuesday, April 17, 2007

Father of the Ration ;-)

காங்கிரஸ் கட்சி தமிழக சட்டசபையில் அடிக்கும் கூத்து எல்லை மீறிப் போய் விட்டதாகத் தெரிகிறது.  முதல்வர் கருணாநிதியே வெட்கிப் போகும் அளவுக்கு, அவருக்கு புகழாரம் சூட்டி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்வதற்கானக் காரணமும் புரியவில்லை.  மேடம் சோனியாவின் உத்தரவாகக் கூட இருக்கலாம், யார் கண்டது??

காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவரான D யசோதா, நேற்று சட்டசபையில் ஒரு தமாஷ் பண்ணினார்.  அதாவது, "மகாத்மா காந்தியை Father of the Nation (தேசப்பிதா) என்று போற்றுவது போல, கருணாநிதி அவர்களை Father of the Ration (நியாய விலைக் கடைகளின் தந்தை ;)) என்று அழைப்பது சாலப் பொருந்தும்" என்று ஒரே போடாகப் போட்டார் !!!

கருணாநிதி அவர்கள், ரேஷனில் 2 ரூபாய்க்கு (1 கிலோ) அரிசி கிடைக்கச் செய்ததோடு அல்லாமல், இன்ன பிற பருப்புகளும் சமையல் எண்ணெயும், மலிவான விலையில் கிடைக்கும்படி செய்ததற்காகவே, இந்த சூப்பர் 'குளிர்ச்சி' புகழாரம் யசோதாவால், அவருக்கு சூட்டப்பட்டது.

இன்னொரு, காங்கிரஸ் MLA தண்டபாணி அவர்கள்,  "திமுக அரசு செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டுவதை நீங்கள் 'ஜால்ரா' என்று கூறினால், அது குறித்து எனக்கு வெட்கமில்லை!  அந்த "ஜால்ரா" இனிமேல் இன்னும் சத்தமாக ஒலிக்கும்.  நீண்ட தூர ஓட்டத்தின்போது (marathon), ஓட்டத்தில் பங்கு பெறுபவர்களை பார்வையாளைகள் உற்சாகப்படுத்துவதை ஒத்தது நாங்கள் திமுக அரசை ஊக்கப்படுத்துவது" என்று நேரடியாகவே போட்டுத் தாக்கினார் :) 

எல்லாம் சரி தான்!  புகழ்ச்சிக்கும் ஒரு அளவு வேணும்!  யாரும் யாரையும், ஹீரோவும் ஆக்க வேண்டாம், அடுத்து சீரோவும் (zero) ஆக்க வேண்டாம்!

நாளைக்கே, யாராவது 'ஆட்சியில் பங்கு கேளுங்க'ன்னு உங்களை (காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!) தூண்டி விட்டு, நீங்களும் பங்கு கேட்டு, 'எப்போதும் போல' நம்ம முதல்வர், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது'ன்னு சொன்னார்னா, நீங்க எல்லாரும் கடுப்பாகி, பெரியவரை தடாலடியா, "Father of the Fashion"ன்னு சொல்லி, காலை வாரி விட்டு விடுவீர்களே!  அதான் கொஞ்சம் பிராப்ளம் :)))

அப்படி பண்ணாம இருந்தா எல்லாம் OK தான்!  அந்த சமயத்துலே, வேற யாரையாவது, "Mother of the Ration"ன்னு சொல்லாமல் இருந்தா சரி தான் ;-)))

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

*** 333 ***

Saturday, March 31, 2007

319. நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன் (அ) யாருக்காக இது யாருக்காக?

நம்ம முகம் தெரியாத 'கிராமத்து அரட்டை அரசியல் அனானி' நண்பர், கொஞ்ச நாள் பிஸியா இருந்துருப்பார் போல, இன்னிக்கு திடீர்னு மெயிலில் ஒரு மேட்டரை அனுப்பி அதை என் பதிவில் இடுமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். மேட்டர், 27% இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையை முன்னிறுத்தி நம்ம "திராவிட" இயக்க அரசு அறிவித்திருக்கும் ஒரு நாள் முழு அடைப்பு பற்றி தான்! எப்போதும் Hot Topics குறித்து தான் நம்ம கி.அ.அ.அ. எழுதுவாரு :) இது பத்தியும் அவரது பிரத்யேக 'அரசியல் அரட்டை' ஸ்டைலில் சூப்பரா, இந்த பந்த்-ஐ விளாசியிருக்காரு ;-) புரியரவங்களுக்கு புரிஞ்சா சரி தான்!

ஏற்கனவே, நம்ம 'இட்லிவடை' எல்லாரையும் முந்திக் கொண்டு, இந்த பந்த் பற்றி எழுதிட்டாரு. கி.அ.அ.அ. கொஞ்சம் லேட் தான், இருந்தாலும் லேட்டஸ்ட் :) Better Late than Never !

கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :) தலைப்பு மட்டும் என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே ! என்சாய் !
*******************************
இட ஒதுக்கீடும் நாளைய வேலை நிறுத்தமும்
------------------------------------------------------------

"அண்ணே நாளைக்கு வேலைக்கு போக முடியாதாண்ணே" என்றபடி வந்தான் மலையாண்டி

"எலே நம்மளை மாதிரியானவங்களுடைய சமூக நீதி காக்கத்தானடா நாளைக்கு பந்த்...மூதி வேலைக்கு போனா நானே உன்னை கல்லால அடிப்பேன்" என்றார் பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூக்கையண்ணன்

"இல்லண்ணே...நான் போக மாட்டேன்...வீட்டுல உக்காந்து சன் டீவி பாக்க வேண்டியதுதான்...ஆமா நாளைக்கு சன் டிவி இருக்குமுல்ல"

"டேய் ..அது இல்லாமையா? அதெல்லாம் "அத்தியாவசிய சேவை " நாட்டுக்கும் அவங்க வீட்டுக்கும்...அதுனால அதுக்கெல்லாம் விலக்கு தான்.. நாலு சமூக நீதி படம் போட்டு ..விளம்பரம் மூலம் கலெக்சன் பாத்துர மாட்டாங்க" என்றான் சுப்பிரமணி.

அப்போது அந்த வழியாக வந்த பூக்காரியிடம் மலையாண்டி "பொன்னாத்தா நாளைக்கு பூ வியாபாரத்துக்கு வந்துராத...நாளைக்கு ஸ்டிரைக்கு" என்றான்

"ஏனுங்க நானோ அன்னாடங்காய்ச்சி...என்னை இப்படி சொன்னா எப்படிங்க?" என்றாள் பொன்னாத்தா

"பூவெல்லாம் அத்தியாவசிய தேவையில வராது...அதுனால விக்க முடியாது..ஆமா பாத்துக்க..அது சரி நமக்காகத் தானே போராடுராங்க.. நம்ம சமூக நீதி காக்க நடக்குற பந்துல நாமளே கலந்துக்கலையின்னா எப்படி பொன்னாத்தா" என்றார் விளக்கும் வகையில் மூக்கையண்ணன்

"அப்படிங்களா...இன்னைக்கும் என் பையன் ஸ்கூலுல ரண்டு குடம் வச்சு எங்காளுங்களுக்கு ஒரு பானையிலும் மத்தவங்களுக்கு ஒரு பானையிலும் குடிக்க தண்ணி வக்கிறாங்க! அதைக் கேக்க ஒரு நாதியுமில்லை....இத்தனை வருஷம் ஆட்சில இருந்துக்கிட்டு அதுக்கோசரம் ஒண்ணும் புடுங்கிப் போட முடியலை..இன்னைக்கும் டீக்கடையில செயினுல தொங்குற அலுமினிய கிளாசு இவங்க சமூக நீதியை பார்த்து பல்லிளிக்குது ...வந்துட்டாங்க சமூக நீதியத் தூக்கிகிட்டு" என்று புலம்பியபடி போனாள் பொன்னுத்தாயி

"இந்தப் படிக்காத சனங்களுக்கு ஒரு மண்ணும் புரியறதில்லை" என அலுத்துக் கொண்டார் மூக்கய்யண்ணன்

"இல்லண்ணே...அது சொல்றதுலையும் ஞாயம் இருக்காப்புலதான் தெரியுது...இம்புட்டு ஏன்..நேத்தைக்கு சட்ட சபை பட்ஜட் கூட்டத்துலையே இடது கம்மூனிஸ்ட் கட்சிக்காரரு கோவிந்தராசுன்றவரு சில ஊர்களில் இன்னும் தீண்டாமை உள்ளது, அரசு பள்ளிகளில் ஆதிதிராவிடர்களுக்கு தனிப் பானையிலும் மற்ற மாணவர்களுக்கு தனிப் பானையிலும் குடிநீர் வைக்கப் படுகிறது..இதற்கான பட்டியலை ஆதாரத்துடன் தரத் தயார்! அரசு இதில் தலையிட வேண்டும்" அப்படீன்னு நேத்து பேசியிருக்காரு.....2007 ல் நடக்குற இந்த அக்கிரமத்துக்கு யாருமே வாயைத் தொறக்கலை ஆனா இதே ஆளுங்க 1931-ல எடுத்த சென்சஸ் கணக்கை ஆதாரமா வச்சு எப்படி ஒதுக்கீடு கேக்குறீங்க அப்படீன்னு கோர்ட் கேட்டதை எதுத்து சவுண்டு விடுறது சூப்பர் தமாசாத்தான் இருக்குது..."

அப்போதுதான் அங்கே வந்த சந்திரன் " டேய் அதுதாண்டா தலைவர் ஸ்டயிலு...அல்லாமே ஓட்டு கணக்கு பாத்துதான் செய்வாரு...இப்போ நாளைக்கு யாரை எதுத்து பந்த் பண்ணுறாங்க...மத்திய அரசைஎதுத்தா? அப்படீன்னா அரசுலே அவங்கதான இருக்காங்க... நீதித்துறையை எதுத்தா...நீதித்துறை ஒண்ணும் தனிச்சையா தீர்ப்பு குடுக்கலியே.. இரண்டு பக்கமும் உள்ள வாதங்களின் அடிப்படையில் "இடைக்கால தடை" தான அறிவிச்சிருக்காங்க..அதனை ஏத்துக்க முடியலைனா திரும்பவும் கோர்ட்டுக்குதான் போகணும்..அல்லது தீர்ப்பு குடுத்த நீதிபதிங்களை தூக்கியடிச்சுட்டு நாம நெனைக்கிற "பொறுப்புள்ள" நீதிபதிகளைப் போட்டு கேசை மறுபரிசீலனை பண்ணனும்.ஆனா இவரு அதெல்லாம் செய்யாம வெறும் பந்த் நடத்துவாரு..ஏன்? ஏன்னா எதிரியே இல்லாம வாள் சுத்துரதுல செம கில்லாடியாச்சே..இதுல எவனாவது கலந்துக்கிடலையின்னா அவன் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதி அப்படீன்னு பச்சை குத்தலாம்... அதுனால இதெதுக்குடா நமக்கு கெரகம்...அப்படீன்னு நெனைச்சுக்குட்டு வேற வழியில்லாம பந்துல கலந்துக்கிட்டானுங்கன்னா..பந்த் மாபெரும் வெற்றி..அப்படீன்னு அறிக்கை விட்டுக்கலாம்..போர போக்கைப் பாத்தா இவரே மாநில அரசின் கையாலாகாத்தனத்தினை கண்டித்து போராட்டம் நடத்துனாலும் ஆச்சரியமில்லை" என்றான்

உடனே மாயாண்டி, "தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டுக்கு கோர்ட் தடை எதும் விதிக்கலையே, அவிங்க ஏன் பந்த்ல கலந்துக்கணும்?" என்று கேட்க,

மூக்கையன் உடனே "இவன் "முன்னேறிய" எதிர்க்கட்சிக்காரன்.. இப்படித்தான் பேசுவான்" என்றார்

"ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுட்டாங்கைய்யா" என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் சந்திரன்
****************

என்றென்றும் அன்புடன்
பாலா

kuzali's posting
osai chella's posting

*** 319 **

Wednesday, February 07, 2007

294. வரம் தந்த பாபாவுக்கு பதமான லாலி !

தலைப்பு என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

அனானி நண்பர் சூப்பர் ·பார்மில் இருக்கிறார் போல் உள்ளது :) இன்னும் 2 மேட்டர்களை மெயிலில் அனுப்பித் தாக்கியுள்ளார் ;) அவற்றைப் பிறகு பதிகிறேன்.

எப்போதும் போல், இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! என்சாய் !

******************
சப்பை மேட்டருக்கு இத்தனை சப்பைக்கட்டா ?

அல்லாரும் பேசி முடுச்சுட்டாங்க ..அதனால நாம ஆரம்பிக்கிறோம் அதாங்க முதல்வர் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா கால்ல விழுந்த மேட்டரு.

எல்லாத்துக்கும் மொதல்ல ஒண்ணு சொல்லிப்போடணும் .....இதுல தப்பொண்ணும் இல்லீங்க...அது அவங்க இஷ்டம்

ஆனா வயசான காலத்துல ஏன் முதல்வர் இப்படி சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்காரு அப்படீன்னு ஒரு கேள்வியும் வருதுங்க

சப்பை கட்டு பார்ட்----1

அவர் நமக்கு நாமே திட்டத்தில் குடுக்குற கேள்வி பதில் அறிக்கையில் சொல்ரத கேளுங்க

" ஏன் மனைவி பக்தி மேலிட்டு காலில் விழவில்லை.வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை "

அட்ரா சக்கைன்னானாம்...அப்பிடியே அவரோட இளவல் திராவிட தலைவர் வீரமணி சொல்லியிருக்கிறதை கேளுங்க

" தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை.ஏனென்றால் காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "

பகுத்தறிவு விஷயமா வீரமணி சொல்றதை முதல்வர் ஏன் ஏத்துக்கணும் அல்லது கேட்கணும் அப்படீன்னு கேள்வி வர்ரது ஞாயம்தான்.

அதுக்கும் முதல்வரே "தெலுங்கு-கங்கை திட்டத்திற்காக ரூ.200 கோடி பாபா செலவழித்துள்ளார்.அதற்கு நன்றி சொல்லும் வகையில் நாங்கு முதல்வர்கள் பங்கேற்கும் விழாவில் நான் கலந்தி கொள்ளட்டுமா என்று வீரமணியிடம் கேட்டுக் கொண்டுதான் கலந்து கொண்டேன் " அப்படின்னு வீரமணியை " பகுத்தறிவு ரெபரன்ஸ் ஆப் தி வர்ல்ட்" ரேன்சுக்கு வச்சு பேசுனதுனால கேட்டோம். அம்புட்டுதான்

சப்பை கட்டு பார்ட்---2

மேலும் முதல்வர் சொன்னது

" 1948 ஆம் ஆண்டு எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும் போதே "திருமாகாளம்" கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிட கழகத்தில் இருந்தனர்.1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டி ராஜாமணியம்மாள்"

இதுலேர்ந்து என்ன சொல்ல வர்ராரு? அவங்க குடும்பமே திராவிட பாரம்பரியம் உள்ளது..அதுனால தயாளு அம்மாளும் அந்த பாரம்பரியம்தான் அதுனால அவங்க காலில் விழுந்தது பக்தியினால் இல்லை... மரியாதை நிமித்தமே அப்படீன்னா ?

ஆனா வீரமணி அய்யா சொல்ராருங்க " இருந்தாலும் தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர்" ன்னுட்டு.

அட...அவுங்க பக்தியாளரா இல்லை பகுத்தறிவாளரா அல்லது பக்தி மிகுந்த பகுத்தறிவாளரா அப்படீன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.

ஏன்னா இதை வச்சு தப்பு & தப்பில்லைன்னு "ஜோ"ரா "ஜல்லியடிச்சு "விடாது" க "லக்கி"ய கூட்டத்துக்கு கொஞ்சம் தெளிவு வருமுல்ல.
*******************

*** 294 ***

அரசியல் கூத்துகள் - 2

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

'ராமர் சேது' கூத்து:பிஜேபி மற்றும் அதிமுக, சேது சமுத்திரம் கப்பல் பாதைத் திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 'ராமர் கேது' என்றழைக்கப்படும், இராமரின் வானர சேனை கட்டிய புராதன பாலத்தின் தடங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், அதை அழிப்பதை நாடு தழுவிய பிரச்சினை ஆக்கப் போவதாகவும் பிஜேபி கூறி வருகின்ற நிலையில், மத்திய அமைச்சர் பாலு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பது நல்ல நகைச்சுவை :)

அவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அந்நாள் தலைமை, மகாத்மா காந்தி 1942-இல் வெள்ளையருக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கியபோது, அயல்நாட்டவரின் ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது ! தேசிய நலனில் என்னே ஓர் அக்கறை !!!

'பாலாற்று அணை' கூத்து:இப்பிரச்சினையில் ஆளும் திமுகவின் 'வழவழா கொழகொழா' அணுகுமுறையினால், அக்கட்சி அதன் தோழமைக் கட்சிகளாலேயே (பாமக, இடதுசாரி, விசி) தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பாமகவின் தலைவர் ஜிகே மணி அவர்கள் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், அவரு,ம் அவரது கட்சியினரும் அணை கட்டவிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டதை ஆந்திர அரசு தரப்பே ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளார் ! ஆனால், அமைச்சர் துரைமுருகனோ சட்டமன்றத்தில், அப்படியொன்றும் இல்லை என்கிறார் !

ஆந்திராவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி ! அதனால் தான் என்னவோ, தமிழக அரசு பேச்சை விடுத்து செயலில் இறங்குவதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் ஆட்சியையும், மத்திய அமைச்சரவையில் பங்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா ?

'மாநகராட்சி மறுதேர்தல்' கூத்து:சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடுவது குறித்து, எதிர்க்கட்சியான அதிமுகவும், மதிமுகவும் குழப்பத்தில் உள்ளன. மறுதேர்தலை அக்கட்சிகள் புறக்கணிக்கும் பட்சத்தில், கேப்டனின் தேமுதிகவுக்கு வாய்ப்புகள் ஓரளவு பிரகாசமாகும்.

மறு தேர்தலில் பெருவெற்றி கிட்டினால் மட்டுமே, சென்ற முறை தேர்தலில் பெருவாரியாக முறைகேடு செய்து ஜெயிக்கவில்லை என்பதை, திமுக பொதுமக்களுக்கு நிரூபிக்க முடியும் என்றும், இத்தேர்தலுக்கு மீண்டும் பணம் செலவழிக்க வேண்டுமே என்றும், திமுகவின் கூட்டணிக்கு இரு பெருங்கவலைகள் உள்ளன.

அதே நேரம், அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் கொண்டாட்டமே ! சமீபத்தில், சென்னை உயர்நீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்வதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலாற்றில் புது அணை கட்டுவதற்கான அறிவிப்பை மாநகராட்சித் தேர்தலுக்குப் பின் வெளியிடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது !!!

எ.அ.பாலா

பி.கு: இன்னும் இரண்டு கூத்துகளைப் பற்றி (காவிரி ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் அமைச்சர் ஆற்காட்டாரின் உயர்நீதிமன்றத்தின் மீதான கடும் விமர்சனம்) நிறைய எழுதலாம் தான் ! இப்ப ரொம்ப அயற்சியாக இருப்பதால் அப்புறம் பார்க்கலாம் ! அதான் தினம், ஒரு கூத்து பற்றிய செய்தி வந்து கொண்டு தானே இருக்கிறது ;-)

*** 293 ***

Monday, October 02, 2006

முகத்தில் கரி அல்லது உவமைக் கருத்து !

இன்று அனானி ஒருவர் மின்மடலில் தான் எழுதி அனுப்பியதை (அவர் வலைப்பதிவர் இல்லை என்பதால்) என்னுடைய வலைப்பதிவில் இடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். "குட்டிக்கதை" வாயிலாக, அவர் கருத்தை சொல்லியிருப்பது சிறப்பு ! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கில் இப்பதிவை இடுகிறேன் :)
****************************

""பூசிட்டாங்க...பூசிட்டாங்க"" என்றபடியே ப்ளூட் கண்னன் ஓடி வந்தான்

" என்னாடா பூசிட்டாங்க" பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா கேட்டார்

"மூஞ்சீல கரி பூசிட்டாங்கப்ப " என்றான் ப்ளூட் கண்ணன்

" யார் மூஞ்சீலடா கரி பூசிட்டாங்க..யார் பூசுனது "

"அப்பா நம்ம தெருவுல சுதந்துரமா திரிஞ்சுக்கிட்டு இருந்த சின்னப்பசங்க மூஞ்சிலதாம்பா..பக்கத்து வூட்டு போலிஸ் மாமா பூசிட்டாரு"

"எதுக்குடா...எப்ப பூசுனாரு "

"அப்பா..இவனுங்க எப்ப பாத்தாலும் அவரைப் பாத்தா "குட் மார்னிங்" அப்படீன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சானுங்க..அவரு டேய்...தமிழ்ல வணக்கம் அப்படீன்னு சொல்லுங்க...நீங்களெல்லாம் தமிழ் நாட்டுல இருக்குறீங்க."அப்படீன்னாரு

" இவனுங்க...எங்களுக்கு இதுதான் டக்குனு வருது..சொல்ல சுளுவா இருக்கு...புடிச்சிருக்கு ...அப்படீன்னு சொல்லிட்டிருந்தாங்க...ஒரு நா அடிக்கப் போயிட்டாரு..அப்பவும் சொன்னதக் கேக்கல.. "

"சரி..இப்ப என்னாச்சு "

'அவரு பெரியண்ணன் ஊருலேந்து வந்திருக்காரு..அவரும் போலிஸ்காரர்தான்...அல்லா பசங்களையும் கூப்பிட்டு..பசங்களா தெனத்துக்கும் தமிழ்ல அழகா "வணக்கம்" அப்படீன்னு சொன்னா சொன்னவனுங்களுக்கு தெனமும் ஒரு ரூபா தருவேன்.நீங்களும் இனிப்பு வாங்கி சாப்பிடலாம் அப்படீன்னாரு.இதக் கேட்ட ரெண்டு பசங்க உடனே" வனுக்கோம் ஐயா " அப்படீன்னு தப்பு தப்பா சொன்னாங்க..அவரும் இப்பிடியாவது சொல்ல ஆரப்பிச்சுட்டாங்களேன்னு சொன்னவனுக்கெல்லாம் ஒரு ரூபா குடுத்தாரு. அதுனால முன்னால சொல்ல முடியாது , தெரியாதூன்னு சுத்திக்கிட்டிருந்தவன்...அவனுக பாவம் சொல்லாட்டி என்ன விடுருங்க.. அப்படீன்னு சொன்னவன் ஆல்லார் மூஞ்சிலையும் கரி பூசிட்டாருல்ல ..ஹா..ஹா..ஹா..ஹே..ஹே..ஹே"
என்று உருண்டு பிரண்டு சிரித்தான் ப்ளூட் கண்ணன்

" ஏன்டா...ஆப்சன் குடுத்தாரு..அது யாருக்கு தேவையோ..யாருக்கு ஒத்து வருதோ அவங்க எடுத்துக்கிட்டாங்க....இவருக்கும் ஏதோ தமிழ் மற்றும் தம்பி மானம் காத்த திருப்தி இருக்கும்...அந்தப் பையன்களுக்கும் யாரும் கட்டாயப் படுத்தலை ..காசு கிடைச்ச சந்தோசம் இருக்கும்....இதுல மூஞ்சில கரி எங்கடா வந்தது..வேன்ணா மெரட்டிப்பாத்த தம்பி போலிஸ் மூஞ்சில கரி அப்படீன்னு சொல்லு ஒத்துக்கலாம் "

" ஆ...அதெப்படி ...மொதல்ல தெரியாது...வராது...முடியாது...நல்லால்லை அப்படீன்னு சொல்லிக்கிடுல்ல திரிஞ்சானுங்க...இப்ப காசுன்னதும் டக்குனு மாறிட்டானே..அப்ப மொதல்ல சொன்னது பொய்தானெ...பொய் சொன்னவன் மூஞ்சில கரிதான?"

"டேய்...ரெண்டு வாரம் முன்ன அம்மாவுக்கு காச்சல்..டாக்டர்கிட்ட நாந்தான் கூட்டிக்கிட்டு போகணும். சனிக்கிழமை வேலைக்கு போகலை..மேனேஜர் கூப்பிட்டு சனிக்கிழமை வேலைக்கு வரலையின்னா..டிஸ்மிஸ் அப்படீன்னாரு..நானும் " யோவ் ...சனிக்கிழமை லீவு..லீவு நாள்ள என் பொண்டாட்டிய உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறத நீ என்னா தடுக்குறது அப்படீன்னு சண்டை போட்டேன் .அடுத்து வந்த சனிக்கிழமையும் அம்மாவுக்கு சிக்குன் குனியா சரியாகலை. ஆனா அந்த சனிக்கிழமை வேலைக்கு வந்தா ரெண்டு நாள் சம்பளம் அதிகமா கிடைக்கும் அப்படீன்னாங்க..அதிகம் பணம் வந்தால் அம்மா மருந்துக்கு ஆகுமே..டாக்டர்கிட்ட சாயங்காலம் போகலாம் அப்படீன்னு முடிவு பண்ணி வேலைக்கு போயிட்டேன்...வேலைக்கு போனதுனால...உங்கம்மா காய்ச்சல் பொய்யீன்னு ஆயிடுமா...தேவைக்கேத்த மாதிரி முடிவெடுத்தேன்...காசு நம்மகிட்ட நிறைய இருந்திருந்தா இப்ப கூட வேலைக்கு போகாம உங்கம்மா கூட ஆஸ்பத்திரி போயிருப்பேன்" அது போலத்தாண்டா இது...இதைப் போய் பெருசா மூஞ்சில கரி...***ல சொறி அப்படீன்னு ஏண்டா சொல்லிக்கிட்டு திரியுற..போ..போ.போய் உருப்படியா வேலை இருந்தா பார் " என்ரார் அப்பா.

இவ்வளவு சொல்லியும் ப்ளுட் கண்ணன் குழப்பமாக " இல்லைப்பா...காலேல மூஞ்சில கரியப் பாத்தேன் " என்றான்

அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்த அப்பா " அட..கரிக்கு பொறந்தவனே..நைட்டு தூங்கும் போது பக்கத்திலிருந்த வென்னித்தவலைய கட்டிப்புடிச்சிருக்க..அதுல இருந்த கரி ஓம்மூஞ்சில ஒட்டியிருந்துருக்கு...காலேல கண்ணாடில அதப் பாத்துட்டு " எதுக்க உள்ளவன் மூஞ்சில கரி " அப்படீன்னு இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுறயே..போ..போயி மூஞ்சிய கழுவிட்டு ...அடுத்தவனை குறை சொல்றதை நிப்பாட்டணும்....எனக்கு இனிமேலாவது நல்ல புத்திய குடு தாயி..அப்படீன்னு குலதெய்வத்தை கும்பிட்டுட்டு வேலையப்பாரு.போடா" என்றார்.

*** 237 ***

Saturday, September 30, 2006

On PMK .. Stalin ... Periyar - ஆ.வியில் சோ

கேள்வி: கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பா.ம.க தனது சொந்த இடங்களிலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. அதற்குப் பழைய வலிமை இல்லை என்கிறார்களே ?

பதில்: பா.ம.க வை தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நான் கருதவில்லை. "நீயும் விட்டு விடு, நானும் சேர்த்துக்க மாட்டேன்" என்று தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் இவர்களை கை விட்டு விட்டால், அந்த தேர்தலோடு அந்தக் கட்சி ஒரு முடிவுக்கு வந்து விடும் (அப்படி ஒரு நிலை வந்தால் பா.ம.க வின் உண்மையான பலம் தெரிய வாய்ப்புள்ளது). இரண்டு அணிகளிலும் சாராமல் தனியாக நின்றால், அவர்களால் இரண்டு ஸீட் கூட ஜெயிக்க முடியாது !
*********************

கேள்வி: உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பொறுப்பு ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறதே ?

பதில்: அப்படி நடந்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஸ்டாலினுக்கு தலைமைப்பதவி கொடுப்பது என்பது திமுகவைப் பொறுத்தவரை இயல்பான ஒன்று தான். திமுக தலைமைக்கே கூட ஸ்டாலினை விட்டு விட்டு, வேறு யாரையாவது கொண்டு வந்தால், கட்சி கட்டுக்கோப்பாக இருக்காது. மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவர் மகன் ஜிகே வாசனை அரசியலுக்கு அழைத்து வந்தார்கள். அன்றைக்கு அவரோடு வந்த தமாகவினர் இன்றைக்கும் காங்கிரஸில் வாசன் பக்கம் தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே ! கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல், கட்சியின் அடிமட்ட நிலையில் இருந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி விட்டுத் தான் தற்போதைய இடத்துக்கு வந்திருக்கிறார். அதனால், வாரிசு அரசியல் என்பது இங்கே பொருந்தாது. (கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன்) அவர் முதலமைச்சராக வந்தால், அந்தப் பொறுப்பில் எப்படிப் பரிமளிக்கப் போகிறார் என்பது வேறு விஷயம் !
*************************

கேள்வி: அண்மையில் பெரியார் சிலைக்கு சிலர் சந்தனம் பூசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதில் உங்கள் கருத்தென்ன ?

பதில்: இந்த விஷயம் பெரியாரை, அவருடைய நினைவுகளைக் கிண்டல் செய்வதற்கு சமமானது. அது காந்தி சிலைக்கு மாமிசம் படைப்பது போன்ற ஒரு செயல் என்று துக்ளக்கில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே சமயம், பெரியார் சிலையை அவமதித்தவர்கள் பன்றிக் குணம் படைத்தவர்கள் என்று முதல்வர் கொதித்தெழுந்திருக்கிறார். அப்படியானால், முன்பு சேலத்தில் ராமர் படத்துக்குச் செருப்பு மாலை அணிவித்து, ராமரைப் பற்றிய அருவருப்பான வர்ணனைகளை வெளிப்படுத்தி, பெரியாரும் அவரது சீடர்களும் ஊர்வலம் நடத்தினார்களே ... அது என்ன குணம் என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும் (இப்படி எடக்கு மடக்கா கேட்டா எப்படிங்க ?). இம்மாதிரி செயல்களை ஒரு முறை நியாயப்படுத்தினாலும், அதன் பிறகு அதுவே பல வக்கிரங்களுக்கு இடம் அளித்து விடுகிறது !

--- எ.அ.பாலா

நன்றி: ஆனந்த விகடன்

*** 236 ***

Friday, September 15, 2006

அரசியல் கூத்துகள்

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

கேலிக்கூத்து 1: கார்கில் போரில் மரணமடைந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீடுகளின் நிலப்பதிவு கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பான கோப்பை, செல்வி ஜெயலலிதா கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கெயெழுத்து இடாமல் வைத்திருந்ததாக கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார் ! இது போலவே, முன்பு இரண்டொரு முறை கலைஞர் குற்றம் சாட்டியபோது, புரட்சித் தலைவி அவற்றை மறுத்து, கலைஞரிடம் ஆதாரம் தருமாறு கேட்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் ! மொத்தத்தில் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவதோடு சரி ! எதற்கும் ஆதாரம் தருவதில்லை ! பின் எதற்கு இம்மாதிரி ஸ்டண்ட் எல்லாம் என்று விளங்கவில்லை. சூப்பர் கேலிக்கூத்து ! இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மடையர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் !!!

கேலிக்கூத்து 2: ஜிப்மரில் (JIPMER) பணி புரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இரு தினங்களுக்கு முன், அங்கு பணி புரியும் செவிலிகள் ஜிப்மர் டைரக்டர் சுப்பராவை சூழ்ந்து கொண்டு, ஜிப்மரை autonomous நிறுவனமாக்கும் மத்திய சுகாதாரத் துறையின் திட்டத்தை கைவிடுதல் குறித்த அரசாணையை, அவர் உடனடியாக பெற்றுத் தராவிடில், அவருக்கும் "வேணுகோபால் கதி" (இதென்ன, 'ராமன் எ·பெக்ட்' மாதிரி வேணுகோபாலை வைத்து ஒரு சொல்லாக்கத்தையே உருவாக்கி விட்டார்கள்:)) ஏற்படும் என்று அச்சுறுத்தியிருக்கின்றனர். ஓரிரு வாரத்திற்கு முன், திரு.ராமதாஸ் ஜிப்மர் சென்று அலுவலர்களை சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். இதில் கேலிக்கூத்து என்னவென்றால், அவரே தன் மகனாகிய அமைச்சரிடம் பேசி, நிலைமை குறித்து ஓர் அறிக்கை விட்டிருக்கலாம் ! அல்லது, திரு அன்புமணியாவது, பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். நடப்பதெல்லாம் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது ! வேணுகோபால் விஷயத்தில் சுறுசுறுப்பு காட்டியவர்கள் இப்போது மெத்தனம் காட்டுவது ஏனோ ?

கேலிக்கூத்து 3: முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு CPM பாலிட்பிரோவிலிருந்து, உடல்நிலை காரணமாக, விலக விருப்பம் தெரிவித்து விடுத்த கோரிக்கையை பாலிட்பிரோ நிராகரித்து விட்டது. அவருடைய அனுபவமும், அறிவுரையும் கட்சிக்கு மிக அவசியம் என்று கரத் கூறியுள்ளார். ஒரு 93 வயது முதியவர் கட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற நினைக்கும்போது, அதை மதிக்காமல் அவரை நிர்பந்திப்பது நல்ல தமாஷ் ! CPM-இல் அனுபவம் / ஆற்றல் மிக்க ஆட்களே இல்லையா என்ன ? ஜோதிபாசு ஓய்வு பெறுவதில், கட்சிக்கு அப்படி என்ன பிரச்சினை ??? பாலிட்பிரோவில் என்னென்ன உள் பிரச்சினைகளோ, யாருக்குத் தெரியும் ???

எ.அ.பாலா

Thursday, August 31, 2006

செ.அரங்கரின் தமாஷ் பேட்டி !

அ.தி.மு.க விலிருந்து சமீபத்தில் வெளியேறி இருக்கும் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் ஜூ.வி க்கு பேட்டி அளித்துள்ளார்.

1. கட்சியை விட்டு வந்தீர்கள் சரி... மதம், ஆன்மிகம் என்று சொல்லி திராவிட இயக்கத்தின் அடிப்படையையே சந்தேகப்பட வைத்திருக்கிறீர்களே ...?

பதில்: சந்தேகமும் இல்லை. குழப்பமும் இல்லை. இந்தப் பத்தாண்டுகளில் எனக்குப் பல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில விஷயங்களை, பிரச்சினைகளை ஆழமாகக் கவனித்தால், மதத்தின் அவசியமும், ஆன்மிகத்தின் அற்புதமும் புரிகிறது (இப்போதாவது புரிந்து கொண்டாரே !!!!)

பெரியாரே நாத்திகர் அல்ல என்பது என் கருத்து.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும், OK யா ;-))

அவர் முழு நாத்திகராக இருந்தால், முகமது நபியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார். அரிஜன மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிப் போராடி இருக்கவும் மாட்டார்.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப சத்தமா சிரிக்கணும், OK யா ;-)) இட்லிவடை மாதிரி, உங்களையெல்லாம் சிரிக்கக்கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேன் :)))

ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு சொல்லி கோயில்களை நிர்வகித்ததைத் தான் அவர் எதிர்த்தார்
(இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தானே !)

2. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், ஆன்மிகமா, அரசியலா ?

பதில்: ஆன்மிகத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவேன். அரசியலிலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது (?!).
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப அழ ஆரம்பிக்கணும், OK வா ;-))

ஆனால், எங்கிருந்து அதைச் செய்வது என்று முடிவு செய்யவில்லை
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப பேய் முழி பெருமுழி முழிக்கணும், OK வா ;-))

பேட்டி இனிதே முடிவடைந்தது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஜுனியர் விகடன்

Wednesday, September 14, 2005

கேப்டன் VS கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி மற்றும் இன்று புதுக் கட்சி (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) தொடங்கிய "கேப்டன்" விஜயகாந்த் ஆகிய இருவரை குறித்து ஓர் ஒப்பு நோக்கு பார்வை :-)
********************************

1. கங்குலி தனது இன்னிங்க்ஸை 9 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் (முதல் ஆட்டத்திலேயே சதத்துடன்) தொடங்கினார். தற்போது அது முடிவடையும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது !!! நமது கேப்டன் தனது அரசியல் இன்னிங்க்ஸை இன்று மதுரையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியிருக்கிறார்.

2. ஒருவர் "கறுப்பு" எம்ஜியார், மற்றவர் "வெள்ளை" மகாராஜா !

3. நமது விஜி மதுரையை (தமிழ்நாட்டை ?) 'மீட்க வந்த சுந்தர பாண்டியன்' ! கங்குலியோ "பிரின்ஸ் OF கல்குத்தா" (பாய்காட் கூற்றின் படி!)

4.. கங்குலி இந்திய கிரிக்கெட்டில் புது ரத்தத்தையும், உத்வேகத்தையும் புகுத்தி ஓரளவு வெற்றி கண்டவர். நமது "கேப்டனின்" செயல்பாடுகள், நடவடிக்கைகள், அரசியல் வளர்ச்சி ... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

5. கங்குலி இந்திய கிரிக்கெட் வட்டார "அரசியலில்" தாதா !! "கேப்டன்" விஜயகாந்த் பொது அரசியலில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார்.

6. கங்குலியின் தளபதியாக, திறமை மிக்க, அமைதியான (பதவி வெறி இல்லாத) ராகுல் திராவிட் இருப்பது அவரது மிகப்பெரிய பலம் என்று கூறலாம். கேப்டனின் தளபதியாக அவரது மனைவி உள்ளது விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்கு (அல்லது தோல்விக்கு!) எந்த அளவுக்கு காரணமாக அமையப் போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

7. கங்குலி ஒரு ஸ்டைலிஷ், 'டைமிங்' மீது நம்பிக்கை கொண்ட ஒரு அருமையான ஆட்டக்காரர். விஜயகாந்த் திரைப்பட சண்டைக் காட்சிகளில் ஸ்டைலாக பாய்ந்து திரும்பி "BACK KICK" பிரயோகம் வாயிலாக வில்லன்களை பந்தாடுவதில் வல்லவர் !!!

8. இரு கேப்டன்களுமே தங்களது 'வாய்' மீது (கங்குலி பேட்டிகளிலும், விஜய்காந்த் தனது அனல் கக்கும் திரைப்பட வசனங்களிலும்!) அதிகம் நம்பிக்கை உடையவர்கள், அதனால் அதை அதிகம் பயன் "படுத்துபவர்கள்" !!!

9. இருவரிடமும் "LEADERSHIP" குணங்கள் இயல்பாகவே அமைந்துள்ளன. இருவருமே மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள். இருவருமே கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள்.

10. கங்குலி-நக்மா தொடர்பு, விஜயகாந்த்-ராதிகா தொடர்பு --- இரண்டுமே பரபரப்பாக பேசப்பட்டு, பின்னர் ஓய்ந்து போன விடயங்கள் ஆயின !!!

11. கங்குலி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் 'உயர' பந்துகளை எதிர்கொள்ள மிகவும் திணறுவார். நமது கேப்டனோ அரசியலில் தனக்கு யாரிடமும் பயமில்லை என்று கூறி வருகிறார் !!! பார்க்கலாம் !

12. இறுதியாக, கங்குலி மைதானத்திற்கு வெளியே (விளம்பரங்களில் !) நடிக்கிறார். "கேப்டன்" விஜயகாந்த் திரைப்படங்களுக்கு வெளியே "நடிக்க" மாட்டார் என்றே தோன்றுகிறது !!!

*********************************

Friday, August 26, 2005

SHOT of the Day அல்லது நெத்தியடி !

**************************************
எனக்குத் தெரிந்த ஆசனம் --- சுஜாதா

சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத் தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே, அது எப்படி ? அது உண்மையா ?

--- ஆர்.பி.ராஜ்குமார், பரமக்குடி

சுஜாதா பதில் : இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எதையாவது எழுதப் போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்) கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது தானே" என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

நன்றி: குமுதம்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails